என்னதான் சொல்லுங்க பள்ளி வாழ்கையும், கல்லூரி வாழ்கையும் என்றுமே இனிப்பான நினைவுகள்.
அப்படிப்பட்ட ஒரு பள்ளி வாழ்கையின் காலை ஒளிருகிறது.
"அம்மா நான் கிளம்பறேன்"
அம்மா - பாத்து போயிட்டு வா
. "சரிம்மா"
ஐயோ அவள் கிளம்பி போய் பத்து நிமிஷம் ஆச்சி. மிதி வண்டியை வேகமாக மிதித்து கொண்டு கிளம்பினேன். இரண்டு தெரு முடித்து மெயின் ரோடை தொடும் வரை என்னமோ பந்தய ஓட்டம் போல மிதித்தேன்.
ஸ்ஸ்ஸ்
மெயின் ரோடு வந்தாச்சி அவளை காணலியே எங்கே ?
திரும்பினால் அவள் நண்பிகளுடன் என்னை கடந்து செல்கிறாள்.
அவள் கடந்து போகும் போது ஒரு கடை பார்வை என்னை பார்ப்பாள். அந்த ஒரு பார்வைக்காக காலையிலும் மாலையிலும் நான் நிற்பது தொடர்ந்தது.
அந்த பத்தாம் வகுப்பிலேயே படிப்பை தவிர மற்ற விஷயங்களே எளிதாக என்னுள் சென்று கொண்டு இருந்தன. இதற்கும் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் அவளிடம் இது வரை பேச முடியவில்லை.
என்ன செய்யலாம்
ம்ம்
நான் இங்கு என் குடும்பத்தோடு குடிவந்து ஒரு வருடம் ஆகிறது. எப்படியாவது அவளிடம் பேசிவிட வேண்டும் ஆனால் என்ன வென்று ஆரம்பிப்பது. இவன் தேறவே மாட்டான்னு நினைசிடுவாளோ இல்ல இவன் கிட்ட பேசி என்ன ஆவப்போது. ஒன்னும் பெரிய வசதி இல்ல ஸ்கூலுக்கு போறது ஒரு பழைய சைகிள்ல. இப்படிஎதாவது
நினைப்பாளோ.
அவளோ நல்ல வசதியான குடும்பம். அவ வர சைக்கிளே அவளுடைய வசதிய சொல்லும.
மவனே இன்னிக்கி நீ அவ கிட்ட பேசறே நான் பாக்கறேன் - என் நண்பன் ஒரு முடிவோட இருந்தான்.
டேய் சந்துரு சாயந்தரம பேசலாம்டா இப்போ ஸ்கூலுக்கு நேரம் ஆச்சி.
போடா போ கிட்டதட்ட ரெண்டு வருஷமா இததான் நீயும் சொல்ற நானும் கேக்குறேன். மவனே இதுக்காக தான் அப்போவே சொன்னேன் அவ வீட்டுக்கு கிட்ட குடி போகாத அவ கிட்ட உன்னால பேச முடியாதுன்னு சொன்னேன்.
நான் -- இல்லடா ஆறாம் வகுப்புலர்ந்து பாக்குறோம் ஆனா பேசினது தான் இல்ல.
நீ பாத்தியா அவ என்னைய ஒரு சிரிப்போட பாக்கறா.
அடேய் அவ உன்ன மாதிரி லூச பாத்திருக்க மாட்டா போல.
ஒரு நாள் மாலை பொழுது
மஞ்சு ஒரு நிமிஷம் இது என் நண்பன்.
சொல்லு என்ன? - அவள்
ஒன்னும் இல்ல இவன் உன்கிட்ட கொஞ்சம் பேசனுமாம் - நண்பன்
ஏன் அவனுக்கு பேச வராதா நீ என்ன அவனுக்கு ??
டேய் பேசி தொலைடா
அது வந்து………………. எப்டி இருக்கே - இது நான்
பாத்தா எப்படி தெரியுது - இது அவள்
எனக்கு காத்துதான் வந்தது. அது வந்து ……….
அவள் போய் ஒரு நிமிஷம் ஆச்சி.
என்னால் பேச முடியல.
என்னடா இது தூரத்துல பாக்கும்போது நல்லா தாண்டா இருக்கா.
பேசினா பொறுமையே இல்லையே எப்படி பேசறது.
டேய் இது ஆவறது இல்ல பேசாம வா போலாம் - நண்பன்.
கல்லூரி அடிஎடுத்து வைத்த காலம்.
நான் அவளுக்காக பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கும் போது................
டேய் நீ இன்னும் திருந்தவே இல்லையா - நண்பன்
இல்லடா எனக்கு அவ கிட்ட பேசறத விட, பேசினதுக்கப்புறம் அவ எனக்கு உன்ன பிடிக்கலய்னு சொல்லிட்டனா என்ன பண்றது. என்னை என்போக்கில விட்டுடு.
இரண்டாவது வருட படிப்பில் ஒரு நாள் அவள் - மழையில்
பஸ் ஸ்டாண்டில்----
- நான் அவளிடம் என்னங்க எப்டி இருக்கீங்க - பாத்து ரொம்ப நாள் ஆச்சி.
அவள் - என் பிரண்டுக்காக வைட் பண்றேன்.
!!!!!!!!!!!!!!! - ஒரு பைக் வந்து நின்றது அவள் அதில் தொற்றிகொண்டால்.
ஒரு நிமிஷம் என் இதயம் நின்றே விட்டது.
மறுபடியும் என் நண்பன் சொன்னான் - நான் தான் அன்னிக்கே சொன்னேன் நீ தான் கேக்கல. இது ஆவறது இல்லன்னு சொன்னேன்.
பின்பு ஒரு நாள் அவளை அதே பஸ் ஸ்டாண்டில் சந்தித்தேன் அப்போது என் படிப்பு முடிந்திருந்தது. அவள் எங்கோ சென்று கொண்டு இருந்தாள்.
ஒரு சிறிய புன்னகை அவளிடம் இருந்து வந்தது. அவள் என்னருகே வந்து பேசினாள் என்ன எப்படி இருக்கீங்க?
நான் நல்லா இருக்கேன் நீங்க - அவள் ஒருவித சலிப்புடன் இருக்கேன் என்றாள்.
என்ன ஆச்சி மஞ்சு ஒரு மாதிரியா இருக்கீங்க.
ஒன்னும் இல்ல ,,,,,,,,,,,
சொல்லுங்க நான் ஒன்னும் தப்பா நினைச்சிக்க மாட்டேன். அவள் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டாள்.
கொஞ்ச நாள் கழித்து நானும் என் நண்பன் சந்துருவும் ஒரு ஹோட்டலில் உணவருந்திகொண்டு இருந்தோம். அப்போது மஞ்சுவின் அம்மா அங்கு காபி குடித்து கொண்டு இருந்தார் என்னை பாத்தவுடன் என்னப்பா எப்டி இருக்கே என்றார்.
நானும் நல்லா இருக்கேன்மா என்றேன். என்ன தம்பி எங்கே வேலை செய்றீங்க?
நான் ஒரு கம்பனில சேல்ஸ் லைன்ல இருக்கேம்மா. நீங்க எப்படி இருக்கீங்க என்றேன். அவர் ஓ என்று அழுது விட்டார் எனக்கு ஒன்னும் புரியல என்ன ஆச்சிம்மா.
உனக்கு தெரியாதா தம்பி?
சொல்லுங்க என்றேன்.
அவர் சொன்னது - மஞ்சுவுக்கு நன்றாக மனம் முடித்து கொடுத்து இருக்கிறார்கள். திருமண ஆன பத்தே நாட்களில் பைக் விபத்தில் அவளுடைய கணவர் இறந்து விட்டாராம் .
கொஞ்ச நாட்களிலேயே அவளின் அப்பாவும் இறந்து விட்டாராம்.
அவர் இறந்த பிறகு அவருடைய வியாபார நண்பர்கள் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக வீட்டையும் விற்று எடுத்து கொண்டார்களாம்.
இப்போது மஞ்சு வேலை செய்து அவளும் அவள் அம்மாவும் வாழ்கையை ஓட்டுவதாக கூறினார்.
நான் அவளிடம் சென்று பேசினேன்.
நீ என்னை தவறாக எடுத்து கொள்ளாதே என்றேன். நான் இன்றும் உன்னையே விரும்பு கிறேன் உனக்கு என்னை பிடித்திருந்தால் சொல் நாம் திருமணம் செய்து கொள்வோம் என்றேன்.
சொல்லு நான் ஒன்னும் தப்பா நினைச்சிக்க மாட்டேன். அவள் ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டாள்.
(அவள் மனதுக்குள் சொல்லியது -----
நான் உன்னை விரும்பிய காலத்தில் நீ என்னிடம் சொல்ல வந்ததை இன்றுதான் சொல்கிறாய். ஆனால் நான் பதில் தரும் நிலையில் இல்லையே என் அன்பே)
அவள் மறுத்தாள் அவளை சம்மதிக்க வைக்க ஆறு மாதம் ஆகியது.
நான் பேச நினைத்தபோது பேச இயலவில்லை. வெகு நாள் கழித்து பேசிய பேச்சு என் வாழ்கையின் ஆரம்ப புள்ளியானது
இன்று அவளும் நானும் எங்கள் குழந்தையுடன் சந்தோசமாக உள்ளோம்.
என் அப்பா சம்மதிக்க வில்லை என்றாலும் என் அம்மா அன்று ஒரு வார்த்தை சொன்னார்.
உன் விருப்பம் போல செய் வாழ்க்கை உனக்கு சந்தோசமாக அமையட்டும் என்றார்
ஒரே வீட்டில் இருந்தாலும்,
இன்று வரை அப்பா பேசவில்லை என்றாலும் என் அம்மாவின் அன்பான ஆசியுடன் என்வாழ்கை இனிதே செல்கிறது.
ஒரு உண்மையான நண்பரின் வாழ்க்கை குறிப்பிலிருந்து அவருடைய அனுமதியோடு

ஒரு உண்மை காதல் கதை
Reviewed by Unknown
on
January 29, 2018
Rating:
No comments: